வவுனியா கல்மடு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 30 வயதான மனோகரன் என்பவர் விசாரணைக்காக இராணுவ முகாமிற்கு அழைக்கப்பட்ட நிலையில் இதுவரை வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் அவர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சட்டத்தை நீக்க வேண்டும் என சர்வதேச சமூகம் வலியுறுத்தி வரும் நிலையில் இக்கைது சம்பவம் வடக்கு கிழக்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
