சுதந்திர இலங்கையின் 79ஆவது தேசிய வரவு – செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் சூழலில் நாட்டின் எதிர்கால வளர்ச்சி, நிவாரணத் திட்டங்கள் மற்றும் அரச வருமானத்தை அதிகரிக்கும் பல்வேறு முக்கிய முன்மொழிவுகள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
முக்கிய நிதி ஒதுக்கீடுகள் மற்றும் வரிச் சீர்திருத்தங்கள்
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு, அஸ்வெசும சமூக பாதுகாப்பு உதவித்தொகை அதிகரிப்பு மற்றும் சுகாதாரத் துறைக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடுகள் குறித்து உரையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதேவேளை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
“நாட்டின் பொருளாதாரத்தை நிலைநிறுத்துவதோடு, சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதே எமது அரசின் முதன்மையான இலக்காகும்.” – ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
பாராளுமன்ற விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் மற்றும் பொருளாதார நிபுணர்களின் பார்வைகள் தமிழ்ஓரியில் உடனுக்குடன் நேரலையாக வழங்கப்படும்.
